திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (12:44 IST)

கர்ப்பமான மாணவி.. கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ! – கருவை கலைத்த டாக்டர் கைது!

நீலகிரியில் பள்ளி சுற்றுலா சென்ற மாணவி கர்ப்பமான நிலையில் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.



நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக மாணவி பள்ளி சுற்றுலா ஒன்றிற்கு சென்று வந்துள்ளார். பின்னர் சில நாட்களில் அவர் உடலில் மாற்றங்கள் தென்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனை அழைத்து சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சுற்றுலா சென்றபோது சக மாணவர் ஒருவருடன் சிறுமி தனிமையில் இருந்ததால் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது. ஆனால் சிறுமியின் பெற்றோர் இதை மறைத்து கூடலூரில் உள்ள நரேந்திர பாபு என்ற மருத்துவரிடம் ரகசியமாக கருக்கலைப்பு செய்துள்ளனர்.


இந்த விவகாரம் வெளியே தெரிய வந்த நிலையில் போலீஸார் மருத்துவர் நரேந்திரபாபுவை கைது செய்து, மெடிக்கல் கடைக்கும் சீல் வைத்துள்ளனர். மேலும் கர்ப்பமான விவகாரத்தில் மாணவி மீதும், கர்ப்பமாக்கிய மாணவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K