வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:37 IST)

புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த இளைஞரை கொன்ற இளம்பெண்கள் கைது

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள சாலையோர கடையில் ஜெய்ஸ்ரீ(24) என்ற இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் சேர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது அந்தக் கடைக்கு வந்த ரஞ்சித் என்ற இளைஞர்(28) இரு பெண்கள் புகைப்பிடித்துக் கொண்டிருப்பதை முறைத்தபடி பார்த்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த ஜெய்ஸ்ரீ, ரஞ்சித்துடன் வாக்குவாதம் செய்ததுடன், புகையை ரஞ்சித் நோக்கி விட்டுள்ளார். இதை ரஞ்சித் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் இளம்பெண்களுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
 
இந்த நிலையில், ஜெய்ஸ்ரீ தனது நண்பர் ஆகாஷை என்பவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அங்கிருந்து ரஞ்சித் தனது வீட்டிற்கு செல்ல முயன்றபோது, இளம்பெண்களுடன் சேர்ந்து ஆகாஷூம் ரஞ்சித்தை தாக்கியுள்ளனர்.
 
இதில், சம்பவ இடத்திலேயே ரஞ்சித் உயிரிழந்தார். அதன்பின்னர் மூவரும் தப்பியோடிவிட்டனர்.
 
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரஞ்சித்தின் செல்போனில் இருந்த வீடியோ, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், ஜெய்ஸ்ரீ, அவரது தோழி மற்றும்  நண்பர் ஆகாஷை கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.