1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (12:08 IST)

பிபிசி ஆவணப்பட வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

supreme court
பிபிசி ஆவணப்பட வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணம் ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த ஆவணத்தை மத்திய அரசு முடக்கியது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
 
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக எடுக்கப்பட்ட பிபிசி ஆவண பலத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல்ல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இந்த வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்படும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran