திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (09:37 IST)

டாடா கல்வி நிறுவனத்திற்குள் பிபிசி ஆவணப்படம்: எதிர்ப்பை மீறி திரையிட்டதால் பரபரப்பு!

bbc
டாடா கல்வி நிறுவனத்திற்குள் பிபிசி ஆவணப்படம்: எதிர்ப்பை மீறி திரையிட்டதால் பரபரப்பு!
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படம் இந்தியாவின் பல பகுதிகளில் திரையிடப்பட்டு வரும் நிலையில் டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற கல்வி நிறுவனத்திலும் திரையிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டாடா நிறுவனம் நடத்திவரும் கல்வி நிறுவனமான t டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவதாக தகவல் வெளியானவுடன் கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் பிபிசி ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என கடுமையான எச்சரிக்கை விடுத்தது. 
 
ஆனால் எச்சரிக்கை மீறி கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த நிலையில் இந்த ஆவணத்தின் திரைப்படத்தை ஏராளமான மாணவர்கள் பார்த்தனர். 
 
இந்த சம்பவத்தை அறிந்ததும் ஏவிவிபி அமைப்பினர் கல்வி நிறுவனம் முன் போராட்டம் நடத்திய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பிபிசி ஆவணப்படம் இனி வளாகத்திற்கு திரையிடப்படாது என டாடா கல்வி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
 
Edited by Siva