பிபிசி ஆவணப்பட விவகாரம்... பட்ஜெட் கூட்டத்தொடரில் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்த விவகாரத்தை அன்றைய தினத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி நிறுவனத்தின் விவகாரம் ஆகியவற்றாஇ கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் பிரச்சனை இல்லாமல் நடக்குமா? எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தை சமூகமாக நடத்த ஒத்துழைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் பிபிசி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினால் எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது
Edited by Siva