1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. baba ram dev fight with anchot in live show

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

baba ramdev
மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்த போது பிரபலமானவர்தான் பாபா ராம்தேவ். ஹரியானா ஹரியானாவை சேர்ந்தவர் இவர் யோகா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலமாக இந்தியாவில் பிரபலமானார். பதாஞ்சலி ஆயுர்வேதம் என்கிற நிறுவனத்தின் இணை இயக்குனராகவும் இவர் இருக்கிறார்.

பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுப்பார். மேடையிலேயே பல சேஷ்டைகளை செய்வார். ஒருபக்கம் தனது பதாஞ்சலி பொருட்களை விற்பனை செய்வதற்காக தவறான தகவல்களை விளம்பரங்களில் சொல்லி நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இந்நிலையில்தான் சமீபத்தில் இவரிடம் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுத்தது. இந்த பேட்டி அந்த தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது திடீரென பாபா ராம்தேவ் பேட்டி எடுத்த நபரிடம் சண்டைக்கு போனார்.

அந்த நபர் ராம்தேவை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ராம்தேவ் அவரை விட வில்லை. பயங்கரமாக மோதியதோடு மல்யுத்த போட்டி போல அவரை கட்டிப்பிடித்து உருண்டார். அந்த நபரை பாபா ராம்தேவ் தாக்க முயற்சி செய்ய அவர் தடுக்க இருவரும் கட்டி உருண்டார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் எதற்காக சண்டை போட்டார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ள பாபா ராம்தேவ் ‘இது முழுக்க முழுக்க விளையாடுக்காகவும், வேடிக்கையாகவும்தான் செய்தேன். இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார்.இதை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதே பாபா ராம்தேவுக்கு வேலையாகி போய்விட்டது. இப்படி தனக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்’ என்று பெட்டிசன்கள் அவரை திட்டி வருகிறார்கள்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...