வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By BALA
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2025 (18:59 IST)

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அளித்த தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடம் வங்கதேசத்தில் மாணவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்ற போது அவர்களை கொல்ல ஹேக் ஹசீனா உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கொலை செய்ய தூண்டியது, உத்தரவிட்டது, மற்றும் அதை தடுக்க தவறியது போன்ற மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போரட்டக்காரர்களை கொல்ல ஆளில்லா விமானங்கள் மற்றும் கொடிய ஆயுதங்களை பயன்படுத்த சொன்னார் எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பிரதமர் பதவியிழந்த ஹசீனா கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் வசித்து வருகிறார். இந்த தீர்ப்பு இன்று வெளியான பின் அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.

இந்த தீர்ப்பு வெளியானதும் ஹசீனாவின் ஆதரவாளர்கள் வங்கதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த தீர்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் ஹசீனா ‘எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒருதலை பட்ச்சமானது.. இடைக்கால நிர்வாகத்தின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் தீர்ப்பை கண்டு நான் அஞ்சப்போவதில்லை.

அரசியல் சக்தியாக திகழும் அவாமி லீக் கட்சியை களத்திலிருந்து அகற்றும் சதிதான் இந்த தீர்ப்பு. எனது தரப்பு வாதத்தை கேட்காமல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது. தீவிர மதவாதிகள் என்னை கொலை செய்ய துடிக்கிறார்கள். வங்கதேசத்தில் இந்துக்கள் உள்பட சிறுபான்மை மதத்தினர் தாக்கப்படுகின்றார்கள்’ என அவர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.