1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ayyappan devotees in flight

விமானத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி: அதிரடி அறிவிப்பு

Flight
விமானத்தில் பயணம் செய்ய அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தர விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் பயணம் செய்து வருவதால் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் சபரிமலை பக்தர்கள் அதிக அளவில் விமானத்தில் பயணம் செய்வதால் சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதுமட்டுமின்றி சபரிமலை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுக்குள் தேங்காய் வைத்து விமானத்தில் எடுத்துச் செல்லவும் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அய்யப்பன் பக்தர்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்