திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:18 IST)

அரசு அலுவலகத்தில் அன்பழகனுக்கு சிலை.. பாஜக கடும் எதிர்ப்பு

anbalagan
அரசு அலுவலகத்தில் அன்பழகனுக்கு சிலை.. பாஜக கடும் எதிர்ப்பு
அரசு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை வைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
முன்னாள் கல்வி அமைச்சர் மறைந்த அன்பழகனுக்கு டிபிஐ வளாகத்தில் சிலை வைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொது இடங்களில் எந்த சிலையும் நிறுவ தமிழக அரசு அனுமதிக்கவில்லை என தமிழக அரசு வழக்கு ஒன்றில் வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது 
 
சாலைகள், நடைபாதை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் சிலை வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலையை நிறுவும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து தலைவர்களின் சிலையையும் அகற்றிவிட்டு தலைவர்களின் பூங்கா ஒன்றை உருவாக்கி அங்கே அனைத்து தலைவர்களின் சிலையை நிறுவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran