செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (18:08 IST)

ஆதார் இருந்தால் தான் பருவதமலைக்கு வர முடியும்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Aadhar
ஆதார் அட்டை இருக்கும் பக்தர்கள் மட்டுமே பருவதமலைக்க்கு வர முடியும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
கலசபாக்கம் தாலுகா தென்மகாதேவ மங்கலம் என்ற பகுதியில் பருவதமலை மல்லிகார்ஜுனஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த பருவத மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இருக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்கள் மலை ஏறினால் மீண்டும் இறங்குவதற்கு நேரம் ஆகும் என்பதால் நேர கட்டுப்பாடுகளை விதிக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதன்படி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு என்றும் கூறப்படுகிறது. இந்த நேரத்தை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva