1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Arunachala Pradesh have a lite earthquake

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

National
மலைத் தொடர்களை அதிகமாக கொண்ட மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக மலைத் தொடர்களை கொண்ட பகுதியாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் வடமேற்கே 148 கி.மீ தொலைவில் பசார் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா! – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!