செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (10:36 IST)

“இந்த வயசுல கல்யாணம் கேக்குதா?”- தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மகாராஷ்டிராவில் மறுமணத்திற்கு விண்ணப்பித்திருந்த தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் சேகர். பேக்கரி நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சேகரின் தந்தை சங்கர். 80 வயதாகும் சங்கரின் மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் சேகருடன், சங்கர் வாழ்ந்து வந்துள்ளார்.

தனிமையில் இருக்கும் சங்கர் செய்தித்தாளை படிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நிலையில் அதில் வரும் திருமண செய்திகளை கவனித்து தான் மறுமணம் செய்து கொள்வதற்காக செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து சேகருக்கு தெரிய வந்த நிலையில், தனது தந்தை சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சண்டை வலுக்கவே ஆத்திரம் அடைந்த நிலையில் சேகர் தனது தந்தை சங்கரை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தானே சென்று காவல் நிலையத்திலும் சரணடைந்துள்ளார். மறுமணம் செய்ய விரும்பியதற்காக தந்தையை மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.