ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:41 IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா! – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

இன்று தைப்பூசத்தையொட்டி அறுபடை கோவில்களிலும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர் கோவில் உட்பட்ட 6 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிவதுடன், வேல் குத்துதல், காவடி தூக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரையிலுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடந்த வியாழக்கிழமையே கோவில்களில் குவிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.