வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:18 IST)

பா.ரஞ்சித்தின் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ''சர்பட்டா படம்'' சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களின்  நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பில் நேற்று முன் தினம் ரிலீஸான படம்  சார்பட்டா பரம்பரை. இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆர்யாவின் நடிப்பையும், பா.ரஞ்சித்தின் இயக்கத்தையும் திரைக்கதை அமைப்பையும் சினிமாத்துறையினர் பாராட்டினர்.

இந்நிலையில்,  சர்பட்டா படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, நியூசிலாந்தைச் சேர்ந்த  letterboxed  என்ற இணையதளம் 2021 ஆம் ஆண்டு வெளியான உலகின் சிறந்த 10 ஆக்சன் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பட்டா பரம்பரம் படம்3 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே இப்படக்குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.