குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த தற்கொலை! ராணுவ வீரர் விபரீத முடிவு!

Last Updated: புதன், 9 செப்டம்பர் 2020 (12:19 IST)

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள்ள விடுதி ஒன்றில் ராணுவப் பாதுகாப்பு அதிகாரி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணிக்காக பணியாற்றி வருபவர் நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்த தேக் பகதூர் தபா. இவர் இன்று அதிகாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள
கோர்கா ரைஃபிள்ஸ் படையினருக்கான விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த சகவீரர் போலீஸாருக்கு புகாரளித்துள்ளார்.

தற்கொலக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டவிசாரணையில் முதுகுவலி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :