இத்தனை வருடமாக தோனி அப்படி செய்து நான் பார்த்ததில்லை… வியந்த சக வீரர்!

Last Updated: புதன், 9 செப்டம்பர் 2020 (12:19 IST)

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக துபாயில் தங்கியுள்ள சிஎஸ்கே அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் நடக்கும் ஐபிஎல் தொடர் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். இதற்காக சென்னையில் சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்ட சி எஸ் கே வீரர்கள் இப்போது துபாய்க்கு சென்று அங்கு தனிமைப் படுத்தப்பட்டு இப்போது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தோனி விக்கெட் கீப்பிங்குக்கான பயிற்சியை மேற்கொண்டார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ‘நான் தோனியோடு பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் இதுவரை விக்கெட் கீப்பிங்குக்காக பயிற்சி மேற்கொண்டதில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக அவர் கிரிக்கெட் விளையாடததால் இப்போது அதை செய்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :