திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (11:01 IST)

முன்னணி சீரியல் நடிகை தற்கொலை… அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம் !

தெலுங்கில் சீரியல்களில் நடித்து பிரபலமான கொண்டபள்ளி ஸ்ரவானி என்ற நடிகை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனசு மமதா, மௌன ராகம்  ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலமாக பிரபலமானவர் கொண்டரபள்ளி ஸ்வராணி. இவருக்கு டிக்டாக் மூலமாக அறிமுகமான தேவராஜ் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த தற்கொலையானது தெலுங்கு சீரியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.