1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Sits On 32,000 Tonnes of Gold: Why PM Modi Wants It Back In Play

இந்தியாவில் வீடுகளில் கோவில்களில் மட்டும் 32,000 டன் தங்கம்.. இதை அரசு பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

இந்திய தங்கம்
இந்திய மக்களின் பேராதரவை பெற்ற தங்கம், வீடுகள் மற்றும் கோயில் அறக்கட்டளைகளில் சுமார் 30,000 முதல் 32,000 டன்கள் வரை முடங்கி கிடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, புதிய தங்கத்தை இறக்குமதி செய்வதை தவிர்த்து, வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இந்தியா தனது தங்க தேவையை பூர்த்தி செய்ய 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 72.4 பில்லியன் டாலர்களை இறக்குமதி செய்ய செலவிட்டுள்ளது. இதனால் ஏற்படும் அன்னிய செலாவணி அழுத்தத்தை குறைக்கவும், வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் தங்கம் மறுசுழற்சி மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பழைய நகைகள், நாணயங்கள் போன்றவற்றை உருக்கி, 24-கேரட் தூய தங்கமாக மாற்றுவதன் மூலம் புதிய தங்க இறக்குமதியை பெருமளவு குறைக்க முடியும்.
 
வீடுகள் மற்றும் கோயில்களில் இருக்கும் தங்கத்தில் வெறும் 1 சதவீதத்தை ஆண்டுதோறும் மறுசுழற்சி செய்தாலே, இந்தியாவின் தங்க இறக்குமதி 25 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தற்போது தங்கம் விலை உச்சத்தில் இருப்பதாலும், நகைக்கடைகளில் வெளிப்படையான மாற்று திட்டங்கள் இருப்பதாலும், இந்திய நுகர்வோர் தங்கத்தை மறுசுழற்சி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
CBSE விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் வாய்ப்பை இழந்தது டிசிஎஸ்.. 566 கோடி ரூபாய் வித்தியாசம்..