1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜனவரி 2026 (12:59 IST)

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

anand ambani
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. இவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து சில வருடங்களாகவே ஊடகங்களில் வெளியாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி சமீபத்தில் இந்தியா வந்தபோது ஆனந்த் அம்பானி குஜராத்தில் நடத்தி வரும் வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு வந்திருந்தார். அப்போது மெஸ்ஸிக்கு இந்திய மதிப்பில் 10.9 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார் ஆனந்த் அம்பானி. அது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்நிலையில்தான், ஆனந்த் அம்பானிகாகவே உருவாக்கப்பட்டிருக்கும் வாட்ச் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமம் சார்பாக வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதை ஆனந்த் அம்பானியே நிர்வகித்து வருகிறார். இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் ஒரு லட்சம் விலங்குகள் வரை பராமரிக்கப்பட்டது. புசுமையை குறிக்கும்படி பச்சை நிறத்தில் இந்த வாட்ச்சை வடிவமைத்துள்ளனர்.
anand ambani

பிரபல வாட்ச் நிறுவனமான Jacob & Co ஒரு பிரத்யோக கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானிக்காக உருவாக்கியிருக்கிறது அந்த கடிகாரத்தில் 397 வைர கற்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. அதில், ஒருபக்கம் யானை, ஒருபக்கம் புலி உருவம் பதிக்கப்பட்டிருக்கிறது. வாட்சின் நடுவில் ஆனந்த் அம்பான்யின் மினியேச்சர் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வந்தாரா என்கிற பெயரும் பதிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 29.9 கிராம் வைரம் அதில் பதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வாட்ச்சின் விலை 12 கோடியே 50 லட்சம் என சொல்லப்படுகிறது.