ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...
கேரள மாவட்டம் கண்ணூரை சேர்ந்த தீபக்(42) கடந்த 16ம் தேதி வேலை நிமித்தமாக அரசு பேருந்தில் பயணித்தபோது அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா என்கிற பெண் தீபக் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல சித்தரித்து தனது மொபைலில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
சில மணி நேரங்களில் இந்த வீடியோ வைரலாக பலரும் தீபக்கை திட்டினார்கள். எந்த தவறும் செய்யாத தீபக்கிற்கு இந்த சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீபக் புலம்பியதாக தெரிகிறது. அதோடு, தனது வீட்டில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் கேரளாவில் பூதாகரமாக வெடித்தது. போலியாக வீடியோ போட்ட ஷிம்ஜிதா முஸ்தபா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கொந்தளித்தனர். அதோடு, தீபக் குடும்பத்தினரும் கேரள டிஜிபியிடம் புகார் கொடுக்க ஷிம்ஜிதா தலைமறைவானார். அதன்பின் உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கெரள போலீஸ் கைது செய்தனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஷிம்ஜிதா மொத்தம் 7 வீடியோக்களை பேருந்தில் எடுத்திருப்பதாக கேரள போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஷிம்ஜிதா ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், பேருந்தில் இருந்தவர்களிம் நடத்திய விசாரணையில் பாலியல் தொந்தரவுக்கான எந்த ஆதாராமும் இல்லை என்பதால் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என கேரள போலீஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.