1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (15:31 IST)

அமித்ஷாவுடன் ஜம்மு-காஷ்மீர் கூடுதல் செயலாளர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இந்தியப் படைகள் அதிகமாக குவிக்கப்பட்டு வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் 
 
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கூடுதல் செயலாளர் ஞானேஷ்குமார் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் கூடுதல் செயலாளர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது 
 
முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்பவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் ஜம்மு செல்ல இருப்பதாகவும் அங்குள்ள நிலைமையை நேரில் அறிய அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது