ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (13:18 IST)

பாஜக எம்.பி.களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கியது !

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது.
 

ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி அளிக்க சிறப்பு வகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாஜக தலைமை அறிவித்திருந்தது.. ‘அப்யாஸ் வர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் அனைத்து எம்.பி.களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இப்பயிற்சி வகுப்புகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை 10 மணிக்கு டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இதில் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.