புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (11:11 IST)

ஆப்ரேஷன் காஷ்மீர்: உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கிறது என உளபுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 
 
அதோடு தேடுதல் பணியும் முடக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது.
 
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். இவை எல்லாமல் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்களில், #OperationKashmir, #Kashmir போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.