1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (14:02 IST)

காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை: அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது

ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அமர்நாத் யாத்திரை, மச்சாயில் யாத்திரை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்நிலையில், தற்போது டெல்லி பாராளுமன்ற வளாகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை தற்போது கூட்டியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் நிலையை பற்றி கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரின் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், தற்போது இந்த கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.