டியுஷன் வந்த மாணவியைக் கர்பமாக்கிய ஆசிரியர் !

Last Modified புதன், 31 ஜூலை 2019 (11:38 IST)
ஜம்மு காஷ்மீரில் தன்னிடம் டியுஷன் படிக்க வந்த மாணவியை ஆசிரியர் கர்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தரம்பூர் மாவட்டத்தில் உள்ள அர்சுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுபவர் சுபாஷ் சிங் எனும் ஆசிரியர். இவர் தனியாக மாணவர்களுக்கான டியுஷனும் எடுத்து வருகிறார். இவரிடம் 10 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற 20 வயது பெண் ஒருவர் சேர்ந்துள்ளார்.

இவர் நீண்டநாட்களாக 10 ஆம் வகுப்பில் பாஸ் ஆகவில்லை என்பதால் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளார் சுபாஷ் சிங். சில நாட்களுக்கு முன்னதாக அந்த பெண் வீட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட அவரை மருத்துவமனையில் பரிசோதித்த போது அவர் கர்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து  பெற்றோர் போலிஸாரிடம் புகார் கொடுக்க போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :