1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. west bengal cm announce food with fish curry for five rupees

அரசு உணவகங்களில் 5 ரூபாய்க்கு மீன் சாப்பாடு!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

fish curry
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது தான் அம்மா உணவகம். ஏழை, எளியவருக்கு பயன்பெறும் வகையில் மிகவும் குறைவான விலையில் இந்த உணவகத்தில் உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது ஒரு ரூபாய்க்கு இட்லி, 1.50 பைசாவுக்கு சப்பாத்தி, ஐந்து ரூபாய்க்கு பொங்கல்,  5 ரூபாய்க்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது. எனது தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளியோர் உணவுவருந்தி வருகிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு பின் திமுக ஆட்சி வந்தும், தற்போது தவெக ஆட்சி மாறிய பின்னரும் அம்மா உணவகங்கள் தமிழகத்தில் மூடப்படவில்லை அது அப்படியே தொடர்ந்து வருகிறது.. ஒருபக்கம், தமிழகத்தை பார்த்து இது போன்ற திட்டத்தை மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் மேற்கு வங்காளத்தில் அரசு உணவகங்களில் வாரம் இருமுறை மீன் குழம்புடன் உணவு 5 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்திருக்கிறார். இது அந்த மாநில மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
கோரிக்கை வைத்த 20 நாட்களில் பேருந்து வசதி.. திராவிடம் 60 வருடங்களில் சாதிக்காததை 10 நாளில் சாதித்த தவெக அரசு...