1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Actress Sumalatha joined in BJP?

நடிகை சுமலதா பாஜகவில் இணைகிறரா?

Sumalatha
பிரபல கன்னட நடிகை சுமலதா பாஜகவில் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பல திரையுலக நட்சத்திரங்கள் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. 
 
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு சுயேச்சையாக நின்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பியான நடிகை சுமலதாவை பாஜகவில் இணைத்து வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நடிகை சுமலதாவின் ஆதரவாளரான சச்சிதானந்தா என்பவர் நேற்று திடீரென பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து நடிகை சுமலதா விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
நடிகை சுமலதா 2024ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மெரினாவில் மாற்றுத்திறனாளி பாதையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது: கமல்ஹாசன்