செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: திங்கள், 28 நவம்பர் 2022 (14:55 IST)

குஜராத் தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக ஜடேஜா தேர்தல் பிரச்சாரம்!

இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி கடந்த ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அரசியல் தரப்பில் பாஜக ஆதரவாளராக ஜடேஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஜாம் நகர் தொகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜடேஜாவின் உறவினரும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தனது மனைவிக்காக இப்போது ஜடேஜா அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.