1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 28 நவம்பர் 2022 (19:22 IST)

ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெறும் - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்திற்கு வரும் டிசம்பர் 1 (89 தொகுதிகள்) மற்றும் 5 (93 தொகுதிகள்) ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 
 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டு,  ஆட்சியைப் பிடிக்க மக்களுக்கு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குகள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய பரப்புரையின்போது பேசிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தலில் நிச்சயம்,  இத்தேர்தலில், பெண்களின் ஆதரவு எங்கள் கட்சிக்கு உள்ளது, 92 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகிறது. இதைப் பயத்தால்,பாஜக வெளியே சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj