1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:39 IST)

சீன எல்லை அருகே இந்தியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி!

indian army
சீன எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைபிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்திய எல்லையில் சீனா அவ்வப்போது ராணுவ பயிற்சி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தும் 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த பயிற்சியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து ஹெலிகாப்டரில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே பயிற்சிகளை இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவது சீனாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran