1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Actres usha jadhav complaint harrasment

படுக்கையை பகிர வேண்டும் என கேட்டனர் : நடிகை பாலியல் புகார்

Actres usha jadhav
சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் தான் பாலியல் தொல்லையை சந்தித்ததாக தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் தெரிவிதுள்ளார்.

 
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை உஷா ஜாதவ் “திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது மிகவும் சாதாரணம். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். அப்போது, நடிக்க வாய்ப்பு தருகிறோம். ஆனால், அதற்கு பதிலாக நீங்கள் என்ன தருவீர்கள் என கேட்டனர். என்னிடம் பணம் இல்லையே என்றேன்? அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அதை நான் நிராகரித்தேன்” என அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி மாற்றம்