1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:04 IST)

நான் 2 குழந்தைகளுக்கு தாய் ; எனக்கும் பாலியல் தொல்லை - பாடகர் மீது பாடகி புகார்

பிரபல பாடகியும், நடிகையுமான மிஷா ஷபி, தனக்கு பாடகர் அலி ஜாபர் பாலியல் தொல்லை தருவதாக புகார் கூறியுள்ளார்.

 
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பாடகி மிஷா ஷபி தனக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொல்லை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில், தனது சக பாடகர் அலி ஜாபர் தனக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அந்த துறைக்கு புதிதாக வந்த போதே, இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பே இது நடந்தது என அவர் கூறியுள்ளார்.

 
நான் பாடகர் அலி ஜாபருடன் பல மேடைகளில் பாடியுள்ளேன். அவரின் செய்கை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோன்ற செயல்களுக்கு அமைதியாக இருக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நான் பேசியுள்ளேன். இதன் மூலம் என்னைப் பார்த்து பெண்களும் வாய் மூடி அமைதி காக்காமல் துணிந்து பேசுவார்கள் என நம்புகிறேன் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.