1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (22:04 IST)

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது

பிரபல முன்னாள் பாலிவுட் நடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
68 வயதாகும் நடிகை ஜீனத் அமன் பாலிவுட்டில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கி இருக்கிறார்.
 
இந்நிலையில், அவர் தன் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் தன்னை பாலியில் பலாத்காரம் செய்ததாக கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, போலீசார் ஜீனத் அமனை பாலியல் பலாத்காரம் செய்த  தொழிலதிபர் அமன் கன்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.