1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A young man committed suicide by killing his girlfriend

பெண்தோழியைக் கொன்று தற்கொலை செய்த இளைஞர்

Uttar Pradesh State
உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தோழிலை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வ்ருகிறது.

இங்குள்ள  சுல்தான்பூர் மாவட்டம் ராம்பூர் பப்புவான் கிராமத்தில் வசிப்பவர் நாகேந்திரா(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரேணு(20) என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளாகப் பழகி வந்தார்.

 இந்த நிலையில், நேற்று காலையில் நாகேந்திரா தன் தோழியைப் பார்க்கச் சென்றபோது, அவரை துப்பாக்க்கியால் சுட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்: அண்ணாமலை