திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:53 IST)

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்...போலீஸார் வழக்குப் பதிவு...மணமகன் தலைமறைவு

rivalver
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்,  மணப்பெண் கையில் துப்பாக்கியை வானை நோக்கிச் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற நகரில் உள்ள சலீம்பூர் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மணமேடையில், மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அப்போது, உறவினர் ஒருவர், மணமகளின் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மணமகள் அதை வானை நோக்கி 4 ரவுண்டு சுட்டார்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலான  நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போலீஸாரின் கவனத்திற்கு வந்த நிலையில், ஹத்ராஸ் ஜங்சன் காவல் அதிகாரி, திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக லைசென்ஸ் வைத்திருப்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே, அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தலைமறைவான மணமகனை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.