ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (09:34 IST)

''பிளாஷ்டிக் பயன்பாடுகளுக்கு தடை'' - உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு

உத்தரபிரதேச மாநில அலுவலகங்களில் பிளாஷ்டிக் பயன்பாடுகளுக்கு தடை விதித்து, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில், பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிரக்கவும், காகிதங்களை வீணாக்கமல் தடுக்கவும் வேண்டி முதல்வர், ஆதித்ய நாத் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அந்த வகையில்,  இன்று அம்மா நில தலைமைச் செயலகம் புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநில தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா அனைத்து துறைகளுக்கும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,’’சுற்றுச்சூழலுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களை பயன்பத்த வேண்டாம்.

எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நடக்கும் கூட்டங்களில்  நீரருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்படுகிறது. காகிதங்களின் இரண்டு புறமும் அச்சிட்டு பயன்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.