வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (15:22 IST)

உமேஷ் பால் கொலை வழக்கு: உஸ்மான் சவுத்ரியை என்கவுண்டர் செய்த போலீஸார்!

encounter
உமேஷ் பால் கொலையில் ஈடுபட்ட உஸ்மான் சவுத்ரி என்பவரை இன்று காவல்துறையால் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில், ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

இதில்,2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ராஜூ பால்  ( பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ) வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் கொல்லப்பட்டார்.

அன்றைய தினம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர் சென்றிருந்த போது, துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளுடன் சில மர்ம நபர்கள் அவரது காரைச் சூழ்ந்துகொண்டன. அப்போது, காரை விட்டு உமேஷ் பால் இறங்கும் போது, அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், உமேஷ் பால் மற்றும் காவர்களும் பலியாகினர்.

இதுகுறித்து உமேஷ் பாலின் மனைவி போலீஸில் புகாரளித்தார். இந்தப் புகாரின்  மீது போலீஸார்5 பேர்  வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் இறுதியில், இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய அர்பசை போலீஸார் என்கவுண்டர் செய்த  நிலையில், இன்று உமேஷ்பால் கொலையில் தொடர்புடைய உஸ்மான் சவுத்ரியை போலீஸார் எங்கவுண்டரில் கொன்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், உஸ்மானை கைது செய்ய முயன்றபோது, போலீஸார் மீது அவர் தாக்குதல்  நடத்தியாதால்தான் போலீஸார் என்கவுண்டர் செய்ததாகக் கூறப்பட்டுகிறது.