வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (07:04 IST)

அருணாசலப்பிரதேசத்தில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அம்மாநில மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதேபோல் இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 1.33 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவி 3.4 அலகுகள்தான் பதிவாகி உள்ளது என்பதால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 அலகுகளாக பதிவாகி இருந்ததாகவும், சிங்கப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்தோனேஷியா, சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 4.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தோனேஷியா, சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் காரணமாக பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அச்சத்துடன் மீண்டும் வீட்டுக்குள் செல்ல தயங்கி வருகின்றனர் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது