1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (11:37 IST)

பேய் வேஷம் போட்டு திரியும் இளசுகள்: பயந்து வீட்டில் முடங்கும் மக்கள்!!

ஊரடங்கை பின்பற்றாமல் திரியும் மக்களை பயமுறுத்தி வீட்டில் உட்கார வைக்க பேய் ஐடியாவை கையில் எடுத்துள்ளது இந்தோனேஷியா. 
 
உலக அளிவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், இதனை மக்கள் செய்வதில்லை. 
 
எனவே, இந்தோனேஷியா கெபூ கிராமத்தில் இளைஞர்கள் சிலர் பேய் போல வேடமிட்டு, சாலைகளில் சுற்று திரிபவர்களை பயனுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளுக்குள் ஓடி ஒளிகின்றனர்.