1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A drunk man set police booth on fire.

குடிபோதையில் போலீஸ் பூத்திற்கு தீ வைத்த நபர்...

delhi
டெல்லி யூனியனில் உள்ள கான் மார்க்கெட்டில் குடிபபோதையில் ஒரு நபர் போலீஸ் பூத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கான்  மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு போலீஸ் பூத்திற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை   நதீம் என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.

பின்னர்,  அவர் ஒரு பைக்கை தீ வைத்து எரித்ததுடன் போலீஸ் பூத்தையும் எரித்தும், செங்கற்களை  உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார்.

உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரித்தனர். இதில், காவல்துறை மீது இருந்த வெறுப்பின் காரணமாக அவர்  இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.

Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
காதலிக்க மறுத்த தோழியை வெட்டிக் கொன்ற நபர் கைது!