1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (18:30 IST)

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது: கேரள முதல்வர் அதிரடி

Pinarayi
கேரளா அமைச்சர் பாலகோபால் என்பவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேரள ஆளுனர் வலியுறுத்திய நிலையில் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள நிதியமைச்சர் பாலகோபாலன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் அதிரடியாக கூறியுள்ளார் 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களால் கேரள மக்களை புரிந்துகொள்ள முடியாது என அவர் கூறியதை அடுத்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்
 
ஆனால் அமைச்சரின் இந்த பேச்சு ஆளுநருக்கு எந்தவித அவமரியாதையையும் ஏற்படுத்தவில்லை என்று விளக்கம் கூறிய முதலமைச்சர் அவருடைய கோரிக்கையை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran