1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (12:43 IST)

குடித்துவிட்டு தொல்லை கொடுத்த பயணி; நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண்!

Kerala
கேரளாவில் பேருந்தில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்த நபரை பெண் ஒருவர் அடித்து, உதைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பனமாரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா என்ற பெண்மணி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கபள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த வழியில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் மதுபோதை ஆசாமி ஒருவர் ஏறியுள்ளார்.

பேருந்தில் சந்தியா அருகே இருந்த இருக்கையில் அமர்ந்த அவர் சந்தியாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சந்தியா அவரை வேறு சீட்டில் அமர சொல்லியுள்ளார். ஆனால் அவர் மறுத்து அங்கேயே அமர்ந்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதை கண்ட மற்ற பயணிகள் அவரை வேறு சீட்டில் மாறி உட்கார சொல்லியும் கேட்காமல் சந்தியாவை தாக்கியும் உள்ளார், இதனால் கோபமடைந்த சந்தியா அந்த ஆசாமியை பேருந்திலிருந்து கீழே தள்ளினார். பின்னர் இறங்கி வந்து அந்த ஆசாமியை அடித்து, உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் சந்தியாவின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.