1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (17:51 IST)

டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து-

kejriwal
டெல்லியில் பொது இடங்களில்  முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாக டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா தொற்று தீவிரமாகப் பரவியது. இதனால் பலலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க அனைத்து மா நிலங்களும், மத்திய அரசுடன் இணைந்து பல  நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் தொற்றுப் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி யூனியனில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் முதல் பொது இடங்களில் முகக் கவசம் இன்றி சென்ரால், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது, கொரொனா தொற்று குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்சவம் இன்றி  செல்வோர்க்கு விதிக்கப்படும் ரூ.500 அபராதத்தை  நீக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Edited by Sinoj