செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:24 IST)

சாலையில் எச்சில் துப்பிய நபருக்கு வினோத தண்டனை: பலே சம்பவம்

சாலையில் எச்சில் துப்பிய நபருக்கு ஒரு வினோத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சாலையில் அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சமீபத்தில் நகராட்சி அதிகாரிகள் கொண்டுவந்தனர். பொது வெளிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் சாலையில் எச்சில் துப்புபவர்கள், சிறுநீர் கழிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து அபராதம் வசூலிப்பார்கள்.

இந்நிலையில் பைக்கில் சென்ற நபர் ஒருவர் சாலையில் எச்சில் துப்பியுள்ளார். அவரை வளைத்து பிடித்த அதிகாரிகள், அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். ஆதலால் அவரை தோப்பு கரணம் போடவிட்டனர் அதிகாரிகள். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.