செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:49 IST)

தாய் மற்றும் 3 மகள்களைக் கொலை செய்த கொடூரன் – 4 ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம் !

சென்னையில் தாய் மற்றும் அவரது மூன்று மகள்களைக் கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 4 ஆயுள்தண்டனைகளை வழங்கியுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை, ராயப்பேட்டையில் தனது மூன்று மகள்களோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதயன் என்பவரோடு நட்பு ஏற்பட்டு காலப்போக்கில் அது இருவரும் சேர்ந்து வாழும் அளவுக்கு வந்துள்ளது.

உதயன் பாண்டியம்மாளோடு அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். 2016-ம் ஆண்டில் பாண்டியம்மாளின் மகள்களிடம் உதயன் தவறாக நடக்க முயல அவரை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார் பாண்டியம்மாள். இதில் கோபமடைந்த உதயன் பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களை உலக்கையால் அடித்து கொலை செய்தார்.

இந்த  கொலைகள் சம்மந்தமாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 377-ன் கீழ் உதயன்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மூன்று வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நேற்று தீர்ப்பளித்தார். அதில் கொலை செய்த உதயனுக்கு 4 ஆயுள்தண்டனைகளும் 20 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.