ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:41 IST)

கல்யாணம் ஆன பெண், சிறுவனுடன் கள்ள உறவு : ஊர் மக்கள் விநோத தண்டனை

திருமணமான பெண் ஒருவர், சிறுவனுடன் கள்ள தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இதுபற்றி அறிந்த ஊரார் இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தில் வசுத்து வந்த ஒரு பெண்ணுகு திருமணமான நிலையில், அப்பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் தவறான உறவு வைத்திருக்கிறார். இதை ஊரார் கண்டுபிடித்துவிட்டனர்.
 
இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் மற்றும், வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதல், அந்த பெண்ணின் உறவினர்கள் , மாணவனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். 
 
ஆனால் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று கருதி இருவருக்கும் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக வரவழைத்தனர்.  அதன்பின்னர் இவர்கள் இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போது இதுகுறித்து அப்பகுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.