பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி – ஊர்ப்பஞ்சாயத்தின் முட்டாள்தனமான தண்டனை !

Last Modified புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:27 IST)
பீஹார் மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமியை மொட்டையடித்து ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர் ஊர்ப்பஞ்சாயத்தினர்.

பீஹார் மாநிலத்தி  கயா எனும் கிராமப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள மறைவானப் பகுதிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரது வாயைப் பொத்தி தூக்கிச்சென்ற கும்பல், அவரை அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் அங்கே சிறுமி சீரழிக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்துள்ளனர். அதன் பின் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பஞ்சாயத்து கூடியுள்ளது. அந்த பஞ்சாயத்தில் அந்த பெண்ணை சீரழித்த வாலிபர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை தருவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமியையே கெட்டுப்போய்விட்டதாகக் கூறியும் அதனால் உன் அசுத்தத்தைப் போக்க வேண்டும்  எனக் கூறி, மொட்டை அடித்து ஊர்வலம் அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இதைப் பற்றி அந்த சிறுமியின் தாயார் போலிஸில் புகாரளிக்க அவர்களின் விசாரணையில் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மற்றவர்களை தேடும் பணியில் துரிதமாக உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :