செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:11 IST)

புலி பசிச்சாலும் புல்லு தின்னாது..ஆனா சிங்கம்???

ஒரு சிங்கம் புல்லை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அமரெலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒருவனப்பகுதியில் ஒரு சிங்கம் புற்களை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுவதை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை குறித்து பலரும் பல பின்னோட்டங்களை இட்டு வருகின்றனர். ஒருவர் சிங்கத்திற்கு உடம்பு சரியில்லை என்று கூறுகிறார். இன்னொருவர் அது ஒரு சைவ சிங்கம் என கேலி செய்கிறார். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று கூறுவார்கள். ஆனால் சிங்கம் சாப்பிடுமோ என்னவோ??