1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A bomb blast in chattisgarh state

தேர்தல் நடைபெறும் நேரத்தில் சத்தீஷ்கரில் குண்டுவெடிப்பு.. நக்சலைட்டுக்கள் காரணமா?

blast
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திடீரென குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90  தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்  இரண்டு தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 நக்சல் பாதிப்பு பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தும் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் தற்போது 20 தொகுதிகளுக்கு உட்பட்ட 5300-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சுமார் 60,000 மேற்பட்ட  பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!