1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2023 (07:29 IST)

தெலுங்கானா தேர்தல்: பாஜகவுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி..!

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில்  மீண்டும் சந்திரசேகர் ராவ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறிவரும் நிலையில் பாஜக முடிந்த அளவு போராட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில்  தெலுங்கானா மாநிலத்தில் பாஜக மற்றும் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் பவன் கல்யாண் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பவன் கல்யாண் மற்றும் பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திப்பதால் காங்கிரஸ் மற்றும் சந்திரசேகர் கட்சிக்கு கடும் சவால் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva